Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூகுள் டிரெண்டில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்!

ஒவ்வொரு வருடமும் முடியும் தருவாயில் அந்த வருடத்தில் டாப் டிரெண்டில் கூகுள் தேடலில் பட்டையைக் கிளப்பிய ஹீரோக்கள், பிரபலங்கள், படங்கள் என கூகுள் தளம் லிஸ்ட் வெளியிடுவது வழக்கம். 

அதே போல் 2014ம் ஆண்டிற்கான லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய பிரபலங்களுக்கான பட்டியலில் சன்னி லியோன் முதலிடம் பிடித்துள்ளார் . மேலும்,  டாப் 10 தேடல் படமாக சன்னி லியோன் நடித்து வெளியான ‘ராகினி எம்எம்எஸ்-2’ முதலிடத்திலும், இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் சல்மானின் ‘கிக்’ மற்றும் ‘ஜெய் ஹோ’ பதிவாகியுள்ளது.

பாலிவுட்டில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 நடிகர்கள் பட்டியலில் அமீர் கான், மற்றும் அபிஷேக் பச்சனின் பெயர்கள் இடம்பெறவே இல்லை.

1. சல்மான் கான் 2. ஷ்ரூக் கான் 3. அக்‌ஷய் குமார் 4. ரன்பீர் கபூர் 5.ஷாகித் கபூர் 6. அமிதாப் பச்சன் 7.வருண் தவான் 8. ரன்வீர் சிங் 9. ஃபவட் கான் 10. இம்ரான் ஹாஷ்மி என இவர்கள்தான் 2014ல் அதிகம் தேடப்பட்ட பாலிவுட் நடிகர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ளனர்.

இதே போல்: 1.கத்ரீனா கைஃப் 2. தீபிகா படுகோன் 3. அலியா பட் 4.பிரியங்கா சோப்ரா 5.ஐஸ்வர்யா ராய் 6.கரீனா கபூர் 7. அனுஷ்கா ஷர்மா 8. ஷாரதா கபூர் 9.சோனாக்‌ஷி சின்ஹா 10. சோனம் கபூர் ஆகியோர் கூகுள் தேடல் பாலிவுட் நடிகைகளில் டாப் 10 இடத்தைப் பிடித்துள்ளனர்.  

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close