Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கடின உழைப்பால் மட்டுமே அதிர்ஷ்டம் கிடைக்கும் - ஹன்சிகா நம்பிக்கை!

’அரண்மனை’ படத்தில் ஆவியாக நடித்து அப்ளாஸ் அள்ளிய ஹன்சிகாவுக்கு இந்த வருடம் முதல் அடுத்த வருடம் முழுக்க எதிர்பார்ப்புக்குரிய வருடமாக மாறிவிட்டது. 

தொடர்ந்து ஐந்து படங்களின் வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறார் ஹன்சிகா. இதுகுறித்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

'' டிசம்பரில் கிறிஸ்துமஸ் சிறப்பாக ஆர்யாவுடன் நடித்த ‘மீகாமன்’ ரிலீஸ் ஆக  உள்ளது. இந்தப் படம் ஹாலிவுட் தரத்துக்கு ஆக்‌ஷன் படமாக இருக்கும். அதைத் தொடர்ந்து ‘உயிரே உயிரே’ படம் வெளியாக உள்ளது.

’உயிரே உயிரே’ படத்தில் கலர்ஃபுல் பட்டர்ஃப்ளையாகவே நடித்துள்ளேன்.  இந்தப் படத்தைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுடன் நடித்த  ‘ ஆம்பள’ படம் வெளியாக உள்ளது.

அடுத்து சிம்புவுடன் நடித்த ‘வாலு’ படம் பிப்ரவரியில் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தில்  சேட்டைக்காரப் பெண்ணாக நடித்துள்ளேன்.

எல்லாவற்றிற்கும் மேல் சிம்புதேவனின் இயக்கத்தில் விஜய்யுடன் நடிக்கும்  ‘விஜய் 58’ படத்தில் இளவரசியாக நடித்து வருகிறேன். எல்லோரும் நான் அதிர்ஷ்டசாலி என்று சொல்கின்றனர். கடின உழைப்பால் மட்டுமே அதிர்ஷடம்  கிடைக்கும் என நான் நம்புகிறவள் '' என கூறியுள்ளார் ஹன்சிகா மோத்வானி.  

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close