Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சினிமாவில் 12 ஆண்டுகளைக் கடந்த த்ரிஷா!

செம்ம ஹேப்பியில்  இருக்கிறார் த்ரிஷா. திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் த்ரிஷாவை வாழ்த்து மழையில் நனைக்கின்றனர். த்ரிஷா  சினிமாவுக்கு வந்து 12 வருடங்கள் ஆனதுதான் வாழ்த்துக்களுக்குக் காரணம். 

பொதுவாக சினிமாவில் ஹீரோயின்களுக்கான ஆயுட்காலம் குறைவுதான். ஒரு ஹீரோயின் நான்கு வருடங்கள் சினிமாவில் நீடிப்பதே ஆச்சர்யம். ஆனால், த்ரிஷா 12 ஆண்டுகளைக் கடந்து வந்திருப்பது பெரிய விஷயம்.

த்ரிஷாவின் சினிமா என்ட்ரி :

த்ரிஷா 1999–ல் சென்னையில் நடந்த அழகிப் போட்டியில் ‘மிஸ் மெட்ராஸ்’ ஆகத் தேர்வானார். அது த்ரிஷாவின் சினிமா என்ட்ரிக்கு முதல் புள்ளியை ஆரம்பித்து வைத்தது. பிரவீன் காந்த் இயக்கிய 'ஜோடி' படத்தில் சின்ன கேரக்டரில் நடித்தார் த்ரிஷா.

பிரசாந்த், சிம்ரன் நடித்த இப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால், த்ரிஷாவின் கேரக்டர் ரொம்பவே சிறியது. சிம்ரனின் தோழியாக ஒரே காட்சியில் நடித்திருப்பார்.

அதற்குப் பிறகு வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கவில்லை. இந்நிலையில், ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ஷாம், மாதவனுடன் 'லேசா லேசா' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால், அந்தப் படம் ரிலீஸ் ஆவதற்குள் 'மௌனம் பேசியதே', 'எனக்கு 20 உனக்கு 18' ஆகிய படங்களில் நடிக்க ஓ.கே சொன்னார்.

 

இதில் 'மௌனம் பேசியதே' படம் டிசம்பர் 13, 2002ல் ரிலீஸ் ஆனது. த்ரிஷா ஹீரோயினாக நடித்து ரிலீஸ் ஆன முதல் படம் இதுதான்.

ஹரி இயக்கத்தில் விக்ரமுடன் நடித்த 'சாமி' படம் த்ரிஷாவைக் கொண்டாட வைத்தது. அதற்குப் பிறகு வெளிவந்த 'கில்லி', 'திருப்பாச்சி',' ஆறு', 'கிரீடம்' படங்கள் கமர்ஷியல் ஹீரோயினுக்கான அங்கீகாரத்தைக் கொடுத்தன.

'அபியும் நானும்' படம் த்ரிஷாவுக்கும்  முக்கியமான படமாக அமைந்தது. கௌதம் மேனன் இயக்கிய 'விண்ணைத் தாண்டி வருவாயா' படம் த்ரிஷாவின் சினிமா கெரியரில் பெரிய திருப்புமுனையைக் கொடுத்தது. அதற்குப் பிறகு கமலுடன் 'மன்மதன் அம்பு' படத்தில் நடித்தார்.

 

'மங்காத்தா' ஹிட்டுக்குப் பிறகு தற்போது மீண்டும் அஜித் படத்தில் நடிக்கிறார். கௌதம் மேனன் இயக்கும் படம், அஜித் நடிக்கும் அடம் என்பதால் 'என்னை அறிந்தால்' படம் த்ரிஷாவுக்கு ரொம்பவே ஸ்பெஷல்தான்.

'ஜெயம்' ரவியுடன் 'பூலோகம்' படம் ரிலீஸூக்கு வெயிட்டிங்.  சுராஜ் இயக்கத்தில் 'ஜெயம்' ரவியுடன் நடிக்கும் 'அப்பாடக்கரு' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழுக்கு நிகராக தெலுங்கிலும் நடித்த த்ரிஷா ஒரு இந்திப் படத்தில் மட்டும் அக்‌ஷய் குமாருடன் நடித்திருக்கிறார். சமீபத்தில் கன்னடத்தில் புனித் ராஜ்குமாருடன்  நடித்த 'பவர்' படம் பட்டையைக் கிளப்பியது.

கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், ஆர்யா, விஷால் , 'ஜெயம்' ரவி, ஜீவா, சிம்பு, ஶ்ரீகாந்த், ஷாம், சித்தார்த் என்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்த த்ரிஷா இன்னும் பல ஆண்டுகள்  சினிமாவில் நீடிக்க நாமும் வாழ்த்துவோம்!

 

 

 

 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்