Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘‘அது குஷ்புவோட பெர்சனல்!’’

‘மானாட மயிலாட’ கலா மாஸ்டரிடம் ஒரு சிட் சாட்! 
 
‘‘மானாட மயிலாட 10வது சீஸன் வரப்போகுது போல... போரடிக்கலையா?’’
‘‘ரொம்ப ரசிச்சுப் பண்ணிட்டு இருக்கேன். மக்களுக்கும் போரடிக்காததாலதான், 10வது சீஸன் வரைக்கும் வெற்றிகரமா வந்திருக்கோம்!’’ 
 
 ‘‘இந்த முறை ஜட்ஜஸ் யாரு?’’
‘‘எல்லோருமே புது ஜட்ஜஸ். ஜனவரி கடைசிவரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணித் தெரிஞ்சுக்கோங்க!’’
                                                                                              
‘‘உங்களைப் பத்தி நீங்களே பெருமைப்பட்டுக்கிற விஷயம்?’’
‘‘முதல் முதலா ‘ஸ்டார் நைட்’ ஷோ பண்ணினது  நான்தான். சினிமாவில் நிறைய சாதிச்சாச்சு. இளையவர்களுக்கும் வாய்ப்புக் கொடுக்கணும்னுதான் அதிலிருந்து வந்துட்டேன். இப்போ சின்னத்திரையில என்னோட நிகழ்ச்சிகள் மூலமா பல திறமைசாலிகளை கண்டுபிடிச்சு உலகத்துக்கு அறிமுகப்படுத்திட்டு இருக்கேன்!’’ 
 
‘‘உங்க தோழி குஷ்பு, இப்போ காங்கிரஸில் இணைந்ததைப் பற்றி உங்க கருத்து..?’’ 
‘‘அது குஷ்புவோட பெர்சனல் விஷயம். அது சரியான முடிவுனு அவ நினைச்சிருக்கலாம். சேனல், ஷோஸ், சினிமா, அரசியல்னு இதை எல்லாம் தாண்டி அவளுக்கும் எனக்கும் நல்ல நட்பு, புரிதல் இருக்கு. குஷ்பு போலதான் எனக்கு நமீதாவும். அவளும் எனக்கு ரொம்ப க்ளோஸ்!’’
 
குறிப்பு: சீஸன் 10 தொடர்பான டி.வி விளம்பரங்களில் மூன்று குட்டீஸ்கள் வருகிறார்கள். இவர்களில் ஒருவர் கலா மாஸ்டரின் மகன் வித்யூத். மற்ற இருவரும் கலா மாஸ்டரின் தங்கை பிருந்தாவின் மகன்களான கிருஷ்ணா மற்றும் கண்ணா! 
 
-வே. கிருஷ்ணவேணி

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close