Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போலீஸாக நடிக்கும் விஜய் சேதுபதி!

வித்தியாசமான கேரக்டர்களில் விரும்பி நடிக்கும் விஜய் சேதுபதி போலீஸாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

'பண்ணையாரும் பத்மினியும்' படத்தை இயக்கியவர் அருண்குமார். விஜய் சேதுபதி, ஜெயப்பிரகாஷ், துளசி, பாலசரவணன் ஆகியோர் நடித்த இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது.

சர்வதேச திரைப்பட விழாக்களில் 'பண்ணையாரும் பத்மினியும் ' படம் திரையிடப்பட்டது. இந்நிலையில், தன் அடுத்த படம் குறித்து அருண்குமார் அறிவித்திருக்கிறார்.

''போலீஸ் கதைதான் படம். போலீஸாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்களின் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் ஷூட்டிங் தொடங்க உள்ளது'' என்கிறார் அருண்குமார்.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close