Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குமுதா ஹேப்பி அண்ணாச்சி!

'அழகிய தீயே', 'பொன்னியின் செல்வன்',  'மொழி', 'அபியும் நானும்', 'பயணம்' , 'கௌவரவம்' ஆகிய படங்களை இயக்கியவர் ராதாமோகன். இவர் இயக்கும் புதிய படத்தில் நந்திதா நடிக்கிறார். படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.

ராதாமோகன் இயக்கிய 'கௌரவம்' படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில், ஹீரோயினை மையப்படுத்திய ஒரு கதையைப் படமாக இயக்குகிறார்.

இதில் நந்திதா ஹீரோயினாக நடிக்கிறார். சீனுராமசாமியின் 'இடம் பொருள் ஏவல்' படத்தில் கனமான கதாபாத்திரமாம். ராதாமோகன் படத்தின் கதையும் தன்னை மையப்படுத்தி  இருப்பதால் குமுதா ஹேப்பிதான்.

இதுகுறித்து ட்விட்டரில் '' ராதாமோகன் டீம் அழகானது. முதல் ஷெட்யூல் ஆரம்பமானது'' என்று ட்விட் செய்துள்ளார் நந்திதா.

மற்ற கதாபாத்திரங்கள், மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close