Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஜித் பற்றி அருண் விஜய்!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அனுஷ்கா , அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘என்னை அறிந்தால்’. 

படத்தின் டீஸர் மற்றும் ஒரு பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலானது. மேலும் இப்படத்தில் அஜித்திற்குப் பிறகு அதிகம் எதிர்ப்பிற்குரியவராக மாறி இருக்கிறார் அருண் விஜய். 

கௌதம் மேனனும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட அருண் விஜய் பற்றியோ அவரது பாத்திரம் பற்றியோ சொல்லாமல் ரகசியம் காத்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில்  அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித் குறித்து ட்விட் செய்துள்ளார். 

'' நான் எப்போதும் உங்களைப் பார்த்து வருகிறேன். உங்கள் மேல் உள்ள மதிப்பு மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. உங்களைப் பற்றி இன்னும் சிறப்பாக தெரிந்துகொள்ள வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி’ எனவும் ,  ’அது வேறு யாரும் இல்லை அஜித் சார்’ என ட்விட் செய்துள்ளார். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close