Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பது என்ற பாலிசியை ஹீரோயினாக நடித்தபோதே பின்பற்றினேன் - பூவே உனக்காக சங்கீதா!

’காலம் மாறி போச்சு’, ‘பூவே உனக்காக’, ‘எல்லாமே என் ராசாதான், ‘கங்கா கௌரி’ உள்ளிட்ட படங்களில் நடித்து 90களில் தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் வாய்ந்த நடிகையாக வலம் வந்தவர் சங்கீதா. 

2003ல் கடைசியாக ’மேரி ஆல்பர்ட்’ படத்தில் நடித்தவர் அதன் பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த துவங்கியவர் இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஆனால் மலையாளத்தில்.

‘நகரவருதி நடுவில் நிஜன்' என்ற படத்தில் நடிகர் சீனிவாசன் ஜோடியாக சங்கீதா நடிக்கிறார் .இதுபற்றி அவர் கூறும்போது,‘சினிமாவில் எனக்கு நண்பர்களோ, தோழிகளோ அதிகம் கிடையாது. எனது சிறுவயது முதல் இன்றுவரை உள்ள ஒரேதோழி இந்திரஜா.

அவருடன் மட்டும்தான் நான் தொடர்பில் இருக்கிறேன். நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பது என்ற பாலிசியை ஹீரோயினாக நடித்தபோதே பின்பற்றினேன். இனியும் அப்படித்தான் என்றார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close