Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சகாப்தம் நாயகி மிஸ் இந்தியாவா?

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ‘சகாப்தம்‘ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படத்தை சுரேந்திரன் இயக்குகிறார். 

மலேசியாவில் பட்டாயா பகுதியில் சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் சாமுராய் வாள் சண்டைக்காட்சியில் சண்முகபாண்டியன் நடித்த காட்சி படமாக்கப்பட்டது.

இதையடுத்து, தாய்லாந்தில் நடுக்கடலில்  ஸ்டண்ட் டைரக்டர் கேச்சா, 200 பேர் பங்கேற்க,   ஸ்டண்ட் காட்சி அமைக்கப்பட்டது.



படத்தின் நாயகி நேஹா ஹிங் 2010ம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா, மற்றும் மிஸ் பிரெஞ்சு, மிஸ் பாலிவுட் டைவா, மற்றும் மிஸ் சர்வதேசப் போட்டியில் செமி ஃபைனல் வரை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சண்முக பாண்டியன் ஜோடியாக ‘சகாப்தம்’ படத்தில் பாவாடை, தாவணி அணிந்து அசல் கிராமத்து பெண்ணாக வேடமேற்று நடிக்கிறார். புதுமுகம் சுப்ரா இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close