Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாஸ் ரிலீஸ் தேதி?

’அஞ்சான்’ படத்திற்குப் பிறகு சூர்யா நடித்து வரும் படம் ‘மாஸ்’. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தில் நயன்தாரா, ப்ரணிதா ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர். 

பிரேம்ஜி, கருணாஸ், ஸ்ரீமன், ரியாஸ்கான், சஞ்சய் பாரதி , டேனியல், வித்யூ லேகா ஆகியோர்  நடிக்கின்றனர். பார்த்திபன், சமுத்திரக்கனி, ஜெயராம் ஆகிய மூவரும் முக்கியமான கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஊட்டி, கேரளா, குலுமணாலி, பல்கேரியா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது.

ஹாரர் காமெடியாக உருவாகும் 'மாஸ்' படத்தின் டீஸர் பொங்கல் சிறப்பாக வெளியாகும் என தகவல்கள் வெளியான நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் ஏப்ரலில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பாக வரும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இப்போது அதற்கு முன்பே மார்ச் 27ம் தேதி படத்தை வெளியிடும் திட்டத்தில் படக்குழுவினர் இருப்பதாக தகவல்கள் தெவிக்கின்றன.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்