Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

CCL விலகிய விஷால் -காரணம் என்ன?

நட்சத்திர கிரிக்கெட் போட்டியில்  ‘சென்னை ரைனோஸ்’ அணியின் கேப்டன் விஷால் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால், 2015ம் ஆண்டு நடக்க உள்ள நட்சத்திர கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகியுள்ளார் விஷால். 

இதற்குப் பதில் அளித்து விஷால் மீடியாக்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். '' ’பூஜை’ படத்தைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் ‘ஆம்பள’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறேன்.

ஒருவருடத்திற்கு இரு படங்களாவது கொடுக்க வேண்டும் என்ற முடிவுடன் செயல்பட்டு வருகிறேன். மேலும், வரும் பொங்கல் சிறப்பாக ‘ஆம்பள’ படத்தை ரிலீஸ் செய்ய உள்ள நிலையில் அதன் புரமோஷன்கள் மற்றும் படத்தின் ஷூட்டிங்கிற்காக இத்தாலி ட்ரிப் என நேரமில்லாமல் வேலை செய்து வருகிறேன். 

கடைசி கட்ட படப்பிடிப்புகள் நடந்து வரும் நிலையில், அது முடிந்த கையுடன் பட ரிலீஸ் வேலைகளை கவனிக்க வேண்டியுள்ளதால் 2015 நட்சத்திர கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடியவில்லை'' என தெரிவித்துள்ளார் விஷால். 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close