Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இயக்குனர் பாலசந்தர் உடல் இன்று தகனம்: படப்பிடிப்புகள் ரத்து!

இயக்குனர் பாலசந்தர் உடல் இன்று தகனம் செய்யப்பட உள்ளது. அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்த் திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தர் நேற்று மாலை காலமானார். அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. பாலசந்தரின் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் மற்றும் திரைப்படத் துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


பாலசந்தரின் உடல் இன்று பிற்பகல் 2 மணியளவில் அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மாலை 4.30 மணியளவில் பெசண்ட்நகர் மின் மனானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

இயக்குநர் பாலசந்தரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்த் திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் இன்று (புதன்கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளன.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close