Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கார்த்திக் சுப்புராஜுக்கு அமிதாப் பச்சன் யூத் ஐகான் விருது!

கடந்த டிசம்பர் 16 முதல் 25ம் தேதியான நேற்றுவரை 12வது சென்னை சர்வதேச திரைப்பட விழா’ நடந்தது. பல்வேறு உலக விழாக்களை கண்ட சினிமாக்கள் திரையிடப்பட்டன. 

நேற்று இவ்விழா நிறைவு பெற்றுள்ளது. இதில் ‘பீட்சா’ மற்றும் ‘ஜிகர்தண்டா’ படங்களின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு ’அமிதாப் பச்சன் யூத் ஐகான்’ விருது வழங்கப்பட்டுள்ளது. சென்ற வருடம் இவ்விருது அனிருத்திற்கு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

‘இந்த விருதை பெற்றதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். எனது ‘பீட்சா’ மற்றும் ‘ஜிகர்தண்டா’ பட டீமிற்கு நன்றி என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

’சதுரங்க வேட்டை’, ’குற்றம் கடிதல்’ , ‘தெகிடி’ ,’சலீம்’ உள்ளிட்ட 12 தமிழ் படங்கள் இவ்விழாவில் பங்கேற்றன.. 

சிறந்த படமாக ‘குற்றம் கடிதல்’ படமும் இரண்டாவது படமாக ’சதுரங்க வேட்டை’ படத்திற்கும் விருது கிடைத்துள்ளது. மேலும் ஜூரி விருது  ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்திற்கும், சிறப்பு மென்ஷன் விருது ‘பூவரசன் பீபீ’ படத்திற்கும் கிடைத்துள்ளது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close