Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐஸூக்கு கல்யாணம்!

சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘சன் சிங்கர்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஐஸ்வர்யாவுக்கு திருமணம். கடந்த ஆகஸ்ட் 3ம் தேதியே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. விசாவுக்காக காத்திருந்தோம். இதோ இப்போது எல்லாமே ரெடி.வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடக்கவிருக்கிறது. கல்யாணப் பெண் பேசுகிறார்!


‘‘இது காதல் திருமணமா?’’
‘‘100 சதவிகிதம் பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணம். என்னோட கல்யாணப் பேச்சை எடுத்ததில் இருந்து நிறைய வரன்கள் வந்துட்டே இருந்தது. அப்படித்தான் பிரனீஷ் கண்ணப்பன் அறிமுகமானார். அமெரிக்காவுல ஐ.டி ஃபீல்டு வேலை பார்க்கிறார். வீடியோ சாட் பண்ணிப் பார்த்தோம். நேர்லயும் பேசினோம். ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தது. நிச்சயதார்த்தத்தை முடிச்சுட்டோம்!’’


‘‘அவர் கொடுத்த முதல் கிஃப்ட்!’’
‘‘நான் ஓகே சொல்றதுக்கு முன்னயே சாக்லேட், பொக்கேனு நிறைய கிஃப்ட் வாங்கி கொரியர் அனுப்பிட்டார். அதையெல்லாம் பொக்கிஷமா வெச்சுருக்கேன்!’’


‘‘மாப்பிள்ளை வீட்டில் என்ன சொல்கிறார்கள்..?’’
‘‘என்னோட மாமியாருக்கு நான் ‘பைரவி’ சீரியல்ல பண்ற ரோல் ரொம்பப் பிடிக்குமாம். என்னை முதல் முறை பார்த்தப்போ, ‘நேர்ல பார்க்கும்போது, டி.வி-யில் பார்க்கும் ஐஸ்வர்யாவையே காணோம்மா! ரொம்ப ஹோம்லியா, சமர்த்துப் பொண்ணா இருக்க!’னு சொன்னாங்க!’’


‘‘திருமணத்துக்குப் பிறகும் மீடியாவில் தொடர்வீர்களா..?’’
‘‘கல்யாணத்துக்கு அப்புறம் நான் அமெரிக்காவில் செட்டில் ஆகப் போறேன். அதனால ஆங்கரிங், ஆக்டிங் எல்லாம் பண்ண முடியுமானு தெரியல. இதுவரைக்கும் ‘கல்யாணத்துக்கு அப்புறம் மீடியா வேணாம்’னு எல்லாம் எந்தப் பேச்சும் வரல!’’


‘‘பிரனீஷ்?’’
‘‘அவரு என்னோட நிகழ்ச்சி, சீரியல்னு எதையுமே பார்த்ததில்லையாம். எங்கிட்ட பேசின பிறகுதான் யூ-டியூப்ல எல்லாத்தையும் பார்த்திருக்கிறார். 'சன் சிங்கர்' நிகழ்ச்சிப் பார்த்துட்டு, இவ்வளவு பேருக்கு முன்னாடி உன்னால எப்படி இவ்வளவு அழகாப் பேச முடியுதுனு ஆச்சரியப்பட்டார்!''.


-வே. கிருஷ்ணவேணி-

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close