Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரஜினி , ஜெயலலிதாவை காட்டிலும் பெரிய மனிதர் ஷங்கர் - ராம் கோபால் வர்மா புகழாரம்!

ஷங்கரின் ‘ஐ’ டிரெய்லரை பார்த்த பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த டிரெய்லரை பார்த்த பிரபல தெலுங்கு இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் விடாது மழையாக பாராட்டி வருகிறார். 

’ஐ’ படத்தின் டிரெய்லைரை பார்த்த பிறகு வெளி ஒரு மனிதனாக ஷங்கர் , ரஜினி மற்றும் ஜெயலலிதாவை விட  தமிழ் நாட்டில் பெரிய ஆள் என உணர்கிறேன் என ட்வீட் செய்துள்ளார்.

ஒருவேளை இந்திய படங்கள் ஹாலிவுட்டின் பார்வைக்கு செல்கிறது என்றால் அதற்கு ஷங்கரின் ‘ஐ’ படம் தான் காரணமாக இருக்கும். 

’ஐ’ படத்திற்கு பிறகு சங்கராந்தி (பொங்கல் - மகர சங்கராந்தி) ஷங்கர் ராத்திரி ஆகும் எனவும், முட்டாள் மனிதர்கள் மட்டுமே இந்த படத்திற்கு முன்பு தங்களது படங்களை வெளியிடுவர் என ’ஐ’ படத்தை பாராட்டி எட்டுக்கும் மேற்பட்ட ட்வீட்களை ட்வீட் செய்துள்ளார் ராம் கோபால் வர்மா. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்