Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏன் வதந்திகளை பரப்புகிறீர்கள் - வெங்கட் பிரபு , சூர்யா!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா , நயன்தாரா, ப்ரணிதா , ப்ரேம்ஜி அமரன், கருணாஸ் நடிப்பில் காமெடி ஹாரர் படமாக உருவாகி வரும் படம் ‘மாஸ்’. 

படம் மார்ச் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சூர்யாவிற்கு பலத்த காயம் பட்டதாக செய்திகள் பரவின. 

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு. ‘ஏன் வந்தந்திகளை பரப்புகிறீர்கள் நண்பர்களே,எல்லாரும் மகிழ்ச்சியா இருங்கள், அட்வான்ஸ் ஹேப்பி மாஸ் நியூ இயர், அன்புடன் சூர்யா’ என சூர்யாவுடன் வெங்கட் பிரபு இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார் வெங்கட் பிரபு. 

படத்தில் பார்த்திபன், சமுத்திரக்கனி, ஜெய்ராம் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளனர். 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close