Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருட்டு விசிடிக்காக தெருவில் இறங்கி தட்டிக் கேட்ட முதல் ஆம்பள - விஷாலுக்கு புகழாரம்!

விஷால், ஹன்சிகா, சதீஷ், வைபவ், சந்தானம், கிரண், ரம்யா கிருஷ்ணன் என ஒரு நடிகர்கள் பட்டாளமே நடிக்கும் படம் ’ஆம்பள’. படத்தின் இசை கடந்த சனிக்கிழமை காலையில் நடந்தது.

இதில் பேசிய டி.சிவா விஷாலின் தைரியம் குறித்து பாராட்டினார். அவர் பேசுகையில், "ஆம்பள' தலைப்பு யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ  நிச்சயம் விஷாலுக்குப் பொருந்தும். திருட்டு விசிடிக்காக தெருவில்  இறங்கி தட்டிக் கேட்ட முதல் ஆம்பள அவர்.



வழக்கமான தயாரிப்பாளர்களே படம் எடுக்கப் பயப்படும் காலம் இது .பட்ஜெட் பற்றிக் கவலைப் படாமல் துணிச்சலாகப் படம் எடுக்கும்போது  தயாரிப்பாளர்களில் இவர் ஆம்பள.

தனக்கு மனதில்பட்ட கருத்துக்ளை பயப்படாமல் சொல்வதிலும் இவர் ஆம்பள " என்றார்.

இதே போல் விஷாலின் தந்தையும் தயாரிப்பாளரும் ஆன ஜி.கே.ரட்டி பேசும்பொது,  '' என் மகன் விஷால் கடுமையாக உழைக்கும் பையன். அவனை வேறுமாதிரி நடிகராக்க விரும்பினேன். ஆனால் 'அவன் இவன்' நடித்த பிறகு அவன் விருப்பத்துக்கு விட்டு விட்டேன். தலையிட வில்லை " என்று கூறினார். 

இதே போல் மன்சூர் அலிகான் பேசியபோது, " திருட்டு விசிடியை ஒரே நாளில் ஒழித்துக் காட்டுகிறேன். ஜெயிலுக்குப் போகிறவர்கள் என் பின்னால் வாருங்கள், " என்றவர், விஷாலுக்கு 'ஆக்ஷன் ஸ்டார்' என்ற பட்டம் வழங்கினார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close