Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘என்னை அறிந்தால்’ படம் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் படத்தின் இசை ஜனவரி 1ம் தேதி இரவு 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது அதே தினத்தில் தற்போது டிரெய்லரும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் கூறுகையில் , சமீபத்தில் வெளியான ‘என்னை அறிந்தால் ‘ திரைப்படத்தின் அட்டகாசமான டீஸர் உலகெங்கும் பரவியதோடு, குறைந்த காலக்கட்டத்தில் அதிகம் பேர் பார்த்த வரலாற்றையும் உண்டாக்கியுள்ளது.

வருகின்ற ஜனவரி 1ம் தேதி ‘என்னை அறிந்தால்’ படத்தின் இசையுடன் படத்தின் முன்னோட்டமும் வெளிவருவது ரசிகர்களுக்கு பேரானந்தம் தரும். புது வருடத்தன்று ரசிகர்களுக்கு இந்த இரட்டிப்பு பரிசு மகிழ்ச்சி தரும் என்பதில் எங்களுக்கு பெருமை என கூறியுள்ளார். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close