Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனுஷுக்கு ஜோடியான எமி ஜாக்சன், சமந்தா!

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் , அமலா பால் இணைந்து நடித்த ’வேலையில்லா பட்டதாரி’ அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றது. .

இந்நிலையில் மீண்டும் இந்தக் குழு அடுத்த படம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும் அதற்கு இசை அனிருத் மற்றும் படத்தின் நாயகி எமி ஜாக்சன் எனவும் தனுஷ் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

அடுத்த ட்வீட்டாக தனுஷ் ,அனிருத் மற்றும் சமந்தாவுடன் இணைந்திருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு , 'விஐபி’ டீம் சமந்தாவை வரவேற்கிறது. பிப்ரவரி 2015லிருந்து படப்பிடிப்பு ஆரம்பம் '' என ட்வீட் செய்திருந்தார்.

இப்போது சதீஷுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ‘ விஐபி குழுவிற்கு புது நபர், உற்சாகமான டீம் சதீஷ் , எமி ஜாக்சன், சமந்தா , இன்னும் நிறைய இருக்கு’ என ட்வீட் செய்துள்ளார் தனுஷ். இதன் மூலம் படத்தில் எமி மற்றும் சமந்தா என இரண்டு நாயகிகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close