Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிகே படத்திலிருந்து எந்தக் காட்சிகளையும் நீக்க முடியாது - சென்சார் தரப்பு!

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர்கான் , அனுஷ்கா ஷர்மா நடிப்பில் கடந்த 19ம் தேதி வெளியான படம் ‘பிகே’. விமர்சனம், வசூல் என படம் ஹிட்டடித்து வருகிறது. படம் 100 கோடி கிளப்பிலும் இணைந்துவிட்டது.

இந்நிலையில் படத்தில் இந்துக் கடவுள்களையும், இந்து மத நம்பிக்கையையும் இழிவு படுத்தும் விதமாக காட்சிகள் உள்ளதாக பஜ்ரங்தள் அமைப்பினர் ’பிகே’ ஓடும் தியேட்டர்களில் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இந்நிலையில் ‘பிகே’ படத்தின் சில காட்சிகளை நீக்கும் படி சில இந்துக்கள் அமைப்புகள் போராடி வருகின்றன. டெல்லியின் பிரபல திரையரங்கங்களின் டிஜிட்டல் போஸ்டர்களின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டு போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளன.

பல இடங்களின் ‘பிகே’ படத்தின் போஸ்டர்கள் எரிக்கப்பட்டும் வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது சென்சார் தரப்பிற்கு படத்தின் சில காட்சிகளை நீக்கும்படி கேட்டுள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர் சென்சார் அமைப்பு. 

சென்சார் நிர்வாக இயக்குநர் லீலா சேம்சன் , ஒரு படம் சென்சாரால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிட்ட பிறகு அதில் மாற்றம் செய்ய முடியாது. மேலும் இதில் வன்முறை காட்சிகளோ, ஆபாச காட்சிகளோ இருப்பின் மட்டுமே அதில் சென்சார் தலையிட முடியும். 

ஒரு மதம் சார்ந்த அடிப்படையில் சொல்லப்பட்டும் கருத்துக்கள் ஒருவரின் படைப்பு மற்றும் கற்பனை சார்ந்த விஷயம் அதில் சென்சார் தலையிட முடியாது என கூறியுள்ளார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்