Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’மருதநாயகம்’ மீண்டும் துவக்கம்?

கமலின் கனவு படமான ‘மருதநாயகம்’ 1997ம் ஆண்டு இங்கிலாந்து ராணி எலிசபெத் முன்னிலையில் துவங்கப்பட்டது. மிகப்பெரிய பட்ஜெட் படம் என்பதால் படம் நிலுவையிலேயே இருந்து வருகிறது. 

ஒரு நேர்முக பேட்டியில் கமலின் குருவான மறைந்த கே.பாலசந்தரே, எத்தனை நாட்களுக்கு என்னை ’மருதநாயகம்’ படத்தை பார்க்க விடாமல் காக்க வைப்பாய்? என கேள்வி கேட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 'மருதநாயகம்' குறித்த கேள்விக்கு தற்போது பதிலளித்துள்ள கமல்ஹாசன், லண்டனில் உள்ள தனது நண்பர் தொழிலதிபர் ஒருவர் அப்படத்தை தயாரிக்க விரும்புவதாக கூறியிருக்கிறார்.

”பட்ஜெட் அதிகமாச்சே என்று கேட்டேன். அது என் கவலை. அத்தனை செலவையும் அந்தப் படம் தாங்கும். நானும் தான்" என்று கூறியிருக்கிறார். எனவே எந்த நேரத்திலும் ‘மருதநாயகம்’ படத்தை கமல் துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மூன்னோட்ட காட்சிகளிலேயே அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய படமான ‘மருதநாயகம்’ தமிழ், ஆங்கிலம், இந்தி, மற்றும் பிரஞ்சு ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஜல்லிக்கட்டு கானா, விரட்டி பிடித்து கபடி, சுட்டிகளின் முழக்கம்... மெரினா போராட்டத்தின் நேற்றிரவு நிகழ்வுகள்
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
[X] Close