Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கார்த்தி அடுத்து விஷால் - மீண்டும் களமிறங்கும் லிங்குசாமி!

முதலில் கார்த்தி நடிக்கும் படம் , பிறகு விஷால் நடிக்கும் படம் என முடிவு எடுத்துள்ளார் லிங்குசாமி. இதுகுறித்து மீடியாக்களுக்கு அவர் அனுப்பிய கடித்ததில் தெரிவித்துள்ளதாவது,

2015 எனக்கு மிகவும் சிறப்பான ஆண்டு, புதிய புராஜெக்டுகளோடு 2015ல் அடியெடுத்து வைக்க உள்ளேன்.ஏற்கனவே இந்த புதிய படங்களுக்கான முன்னேற்பாடுகள் முடிந்துவிட்டன. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் .

 

’பையா’ மற்றும் அதன் தெலுங்கு டப்பிங்கான ‘ஆவரா’  படங்களின் வெற்றிக்கு பிறகு மீண்டும் கார்த்தியின் புதிய படத்தில் இணைந்துள்ளேன். புதுமுக நடிகை படத்தின் நாயகியாக நடிக்க உள்ளார். மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும்.

இந்த படத்திற்கு பிறகு விஷால் நடிப்பில் ‘சண்டக்கோழி 2’ படத்தை எடுக்க உள்ளேன். இப்படம் தெலுங்கிலும் வெளியாகும். எனது வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்த ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள், இதே ஆதரவை அடுத்த ஆண்டிலும் அளிப்பீர்கள் என நம்புகிறேன் என அக்கடித்ததில் லிங்குசாமி தெரிவித்துள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close