Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹன்சிகாவின் அன்புக்கடிதம்!

இந்த வருடம் மட்டும் ஹன்சிகாவிற்கு ’மான் கராத்தே’, ’பவர்’, ’அரண்மனை’, ’மீகாமன்’ என நான்கு படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த வருடத்திலும் சிம்புவுடன் ‘வாலு’, ஜெயம் ரவியுடன் ‘ரோமியோ ஜூலியட்’, ‘உயிரே உயிரே’, ’ஆம்பள’, விஜய்யின் 58வது படம், உதயநிதியுடன் ’இதயம் முரளி’, என ஆறு படங்களுடன் செம பிசி நாயகியாக மாறியுள்ளார்.

இந்நிலையில் மீடியா நண்பர்களுக்கு தனது நன்றிகளையும் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.அக்கடித்ததில்

என் வாழ்த்துக்கள் பல !!!

உங்களின் அளப்பறியா அன்பாலும், ஆதரவாலும் 2014 ஆம் ஆண்டு வெற்றிகரமாய் அமையபெற்றது.

’மான் கராத்தே’, ’பவர்’,  ’அரண்மனை’,  ’மீகாமன்’  என  இவ்வருடத்தில்  வெற்றி  வித்தாய் இருந்த இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள், நடிகர்- நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் எனது ஆதரவாளர்கள்அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அனைவரின் அன்புக்கும், ஆதரவிற்கும் எனது உள்ளம் நிறைந்தநன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். 

2015 ஆம் ஆண்டும் உங்கள் ஆதரவை நல்கிட விழைகிறேன்

 அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...

என்றும் அன்புடன்

ஹன்சிகா

என தனது புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார் ஹன்சிகா. 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close