Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்னை அறிந்தால் ரிலீஸ் தேதி மாற்றம்!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அனுஷ்கா நடிப்பில் ஹாரிஸ் இசையில் வெளியாக உள்ள படம் ‘என்னை அறிந்தால்’. 

படத்தின் வெளியீடு பொங்கல் சிறப்பாக ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் இன்று இரவு 12 மணிக்கு புத்தாண்டு சிறப்பாக வெளியாகி இணையம் முழுவதும் டிரெண்டாகியுள்ளது. தற்போது படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 29 என மாற்றப்பட்டுள்ளது. 

படத்தின் இறுதி கட்ட பணிகள் இன்னும் முடிவடையாத நிலை இருப்பதால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது என படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close