Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிக்க வந்தா டான்ஸ் ஆட சொல்லிட்டாங்க - வெங்கடேஷ் சுந்தர்!

சத்யராஜ், கவுண்டமணி, மணிவண்ணன் இவர்கள் மூவர் இணைந்தால் நக்கலுக்கும், நையாண்டிக்கும் குறைச்சலே இருக்காது. இவர்கள் மூவரும் கோயம்புத்தூரை சேர்ந்தவர்கள். அவர்கள் ஊரிலிருந்து காமெடிக்கு என புது இறக்குமதி வெங்கட் சுந்தர். கிறிஸ்துமஸ் அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்,  ரசிகர்களை சிரிப்பு மழையில் நனைய வைத்துகொண்டிருக்கும் கப்பல் படத்தில் பட்டாபி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் இவர்.

 

“ குறும்படங்களில் நடித்து கொண்டு இருந்தேன். ஷங்கர் சாரின் நண்பன் படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடிச்சேன். பிறகு சிறு சிறு கதாப்பாத்திரங்கள் என நகர்ந்த நேரம். கப்பல் பட இயக்குநர் கார்த்திக் எனக்கு இந்த கதாப்பாத்திரம் அளித்தார்.”

 

“ ஒவ்வொரு முறையும் கோயம்புத்தூரிலிருந்து இங்கே வரும்பொழுது பஸ் பஞ்சர் ஆகிடும், Train லேட் ஆகிடும். வேற யாரும் நடிச்சிருவாங்களோ என்று யோசித்துகொண்டே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கடைசியா வந்து சேருவேன்.”

 

படத்தில் நண்பர்களாக வந்த கருணா, அர்ஜுன் எனக்கு நெருங்கிய நண்பர்கள். ஞாபக மறதிமிக்க பட்டாபி கதாபாத்திரத்தின் முகஜாடை அமைத்திருந்தது எனினும் எதோ குறைகிறது என்றார் கார்த்திக், உடனே அருகிலிருந்த பவுடரை நெற்றியில் பூசிக்கொண்டேன். அது அங்கு இருந்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.” என்றார் வெங்கட் சுந்தர்.

 

“சின்ன வயசுல இருந்து நடிக்க மட்டும்தான் ஆசைப்பட்டேன். இங்க சினிமாக்குள்ள வந்த டான்ஸ் அட சொல்லிட்டாங்க. இந்த படத்துல ஊர விட்டு ஊரு வந்து.. பாட்டுக்கு என்னமோ செஞ்சு ஆட வச்சிடாங்க தினேஷ் மாஸ்டர்.”

 

“ படத்தில் ஹிந்தி பேசுற மாதிரி வருகிற காட்சியில். எங்களுக்கு தெரிஞ்ச எல்லாம் மொழியையும் பேசி நடிச்சுட்டோம்” தமக்கே சொந்தமான கோயம்பத்தூர் குசும்போடு கூறினார்.

 

“ ஷங்கர் சார் படத்தில் சிறிய கதாப்பாத்திரம் மூலம் அறிமுகமான நான் இன்று அவரது ‘S’ பிக்சர்ஸின் கப்பல் மூலம் அனைவருக்கும் தெரியும்படி மாறியுள்ளேன். வாய்ப்பளித்த இயக்குனர், ‘I’ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் எனக்கு உறுதுணையாய் இருக்கும் குடும்பத்தார்க்கும். அனைத்திற்கும் மேலாக என்னை ஏற்று கொண்ட ரசிகர்களுக்கு நன்றி ” என நெகிழ்ச்சியுடன் கூறினார் வெங்கட் சுந்தர்.

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close