Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதென்ன 10 எண்றதுக்குள்ள - விஜய் மில்டன் பதில்!

’கோலிசோடா’ படத்திற்கு பிறகு விஜய் மில்டன் அடுத்து விக்ரம் , சமந்தா நடிக்கும் ‘10 எண்றதுக்குள்ள’ என்னும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் தலைப்பு குறித்து விஜய் மில்டனிடம் கேள்வி வைக்கப்பட்டது!. அதற்கு அவர் கூறியதாவது.

நான் இப்போது இயக்கும் படம் '10 எண்றதுக்குள்ள ' .விக்ரம்தான் நாயகன். சமந்தா, ஷாக்கி ஷெராப், அபிமன்யு சிங், 'முண்டாசுப்பட்டி' முனிஷ் நடிக்கிறார்கள்.90 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டது. 2 பாடல்கள், க்ளைமாக்ஸ் மட்டும் பாக்கியுள்ளது.

வண்டி வாகனங்களில் போவோருக்குத்தான் ஒவ்வொரு வினாடியும் முக்கியம் என்பது தெரியும். 600மைல் வேகத்தில் செல்லும் விமானிக்கு சில வினாடிகள்கூட முக்கியம்தான்.தொலைவில் குறுக்கே ஏதாவது வரும் போது அந்த வினாடியில் அவர்கள் சிந்தனை,செயல்படும் வேகம் முக்கியம்.

லாரியில் காரில் 140கி.மீ வேகத்தில் போகும் போது சில வினாடிகள் கூட முக்கியம்தான். '10 எண்றதுக்குள்ள' என்கிற இந்த வார்த்தை பல இடங்களில், பல சூழல்களில் பிரபலம். எனவே வேகம் நேரம் இவற்றைக் குறிக்கும் வகையில்அதை தலைப்பாக வைத்தேன்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close