Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் படம் பெயர் புலி - பொங்கல் ட்ரீட்டாக விஜய்யே நேரடியாக அறிவிக்க உள்ளார்!

விஜய்யின் சினிமா பயணங்களில் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய ‘குஷி’ படமும் ஒரு மைல் கல். வித்யாசமான நடிப்பு, யூத்ஃபுல் கான்செப்ட் என படம் மெகா ஹிட்டானது.

இதை பல மேடைகளில் விஜய்யே கூறியுள்ளார். இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா விஜய்யை வைத்து இயக்குவதற்காக ‘புலி’ என்ற பெயரில் ஒரு படத்தை பரிசீலனையில் வைத்திருந்தார். எனினும் சில காரணங்களால் படம் கைவிடப்பட்டது. 

தற்போது சிம்பு தேவன் இயக்கும் படத்திற்கு ‘மாரிசன்’, ‘கருடா’, ’போர்வாள்’ இப்படி பல பெயர்கள் பரிசீலனையில் இருந்துவந்தது. தற்போது இந்த படத்திற்கு ‘புலி’ என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த பெயரை எஸ்.ஜே.சூர்யா விஜய்காக விட்டுக் கொடுத்துள்ளார். இதே போல் ‘வில்லு’ படத்தின் டைட்டிலும் எஸ்.ஜே.சூர்யாவிடம் இருந்து பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து விஜய்யே ட்விட்டரில் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அறிவிக்க உள்ளார்.அன்றைய தினம் ட்விட்டரில் ரசிகர்களுடன் நேரடியாக உரையாடவும் இருக்கிறார். 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close