Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நயன்தாராவின் நைட்ஷோ, மாயாவாக மாறியது!

ஒரே நேரத்தில் இரு வேறு ஹாரர் படங்களில் நடிப்பவர் நயன்தாராவாகத்தான் இருப்பார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யாவுடன் ‘மாஸ்’ மற்றும் ’நெடுஞ்சாலை’ நாயகன் ஆரியுடன் இணைந்து நடிக்கும் ‘ நைட் ஷோ’. 

இந்த படத்தின் பெயர் ‘நைட் ஷோ’ என்பது மக்களிடம் சற்று தவறான கண்ணோட்டத்தை உருவாக்கும் என்பதால் நயனே இதை மாற்ற சோல்லி இருக்கிறாராம். 

தற்போது படத்தின் பெயர் ‘மாயா’ என மாற்றப்படுள்ளது. புதுமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கும் இதில், ‘சுட்டகதை’, ‘கௌரவம்’ ஆகிய படங்களில் நடித்த லட்சுமி பிரியாவும் இப்படத்தில் முக்கியகதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘மாயா’ படத்தின் கதை மூன்றுவிதமாக இருக்குமாம்.ஆனால் நயன்தாரா ஒரே ஒரு கேரக்டரில்தான் நடிக்கிறார்.

இதுதான் மற்ற பேய் படங்களுக்கும், இந்த படத்துக்கும் வித்தியாசத்தை தருகிறது என்று படத்தின் தயாரிப்பாளர் பிரபு மற்றும் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்