Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரபலங்கள் விற்பனைக்கு!

மெரிக்காவில் உள்ள ஒரு வீட்டில், உலகப் பிரபலங்கள் அனைவரும் உள்ளார்கள் என்றால் ஆச்சர்யம்தானே! ஆம்... கலிஃபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த நோயல் க்ரூஸ் என்பவருடைய வீட்டுக்குச் சென்றால்... மைக்கேல் ஜாக்ஸன், இளவரசி டயானா, ஏஞ்சலினா ஜோலி, மர்லின் மன்றோ என்று இன்னும் பல சர்வதேசப் பிரபலங்கள் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்... பொம்மைகளாக!

பொழுதுபோக்காக பிரபலங்களின் பொம்மைகளை உருவாக்கத் தொடங்கி, இப்போது அதையே முழு நேரத் தொழிலாக மாற்றி, லாபம் குவித்து வருகிறார் நோயல்!



‘‘சிறுவயதிலிருந்து வரைவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். திருமணத்துக்குப் பின், பார்பி பொம்மைகளின் காதலியான என் மனைவி நிறைய பார்பிகளை என் வீட்டில் சேகரிக்க ஆரம்பித்தாள். அந்த பொம்மைகளும் எனது ஓவியங்களும் இணைந்தால்... என்று மூளையில் ஒரு ஃபிளாஷ். அதன் ரிசல்ட்தான்... உலகப் பிரபலங்கள் எங்கள் வீட்டுக்கு வர ஆரம்பித்த கதை!’’ என்று சொல்லும் நோயல்... தன் வீட்டிலிருக்கும் உலக பிரபலங்களின் பொம்மைகளுக்கு இடையே நின்று சிரிக்கிறார்.

‘‘என் மனைவியின் பார்பி பொம்மைகளை எல்லாம் ரீ மாடலிங் செய்து புது உருவமாக மாற்றுவேன். முதலில் நான் கை வைப்பது, ஹேர் ஸ்டைலில்தான். பின்னர் பார்பியின் மேல் தடவப்பட்டிருக்கும் பெயின்ட்டை நீக்கிவிடுவேன். பிறகு யாருடைய பொம்மையை உருவாக்க விரும்புகிறேனோ, அவர் புகைப்படத்தைப் பார்த்து வெளிப்புறப் போர்ஷன்களை எல்லாம் செதுக்கி, புதிதாக பெயின்ட் செய்வேன். கண்களில் ஆரம்பித்து முழு உருவத்தையும் இப்படி உருவாக்குவேன்!



புதிதாக ஒரு பொம்மையை உருவாக்குவதை விட, உலகறிந்த ஒருவரை பொம்மையாக உருவாக்குவது கடினம். அனைவருக்கும் பரிச்சயமான அந்த முகத்தில் ஏதாவது சின்னதாகச் சொதப்பினாலும் ஃபெயிலியர் ஆகிவிடும். அதனால் மிக கவனமாக ஒவ்வொரு பொம்மையையும் உருவாக்குவேன். ஒரு பொம்மை செய்ய, குறைந்தது ஒரு வாரமாவது ஆகும் எனக்கு. ஒரு பொம்மையின் விலை 1250 டாலரில் இருந்து ஆரம்பிக்கும். பொழுதுபோக்காக ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் இது என் முழு நேரத் தொழிலாக மாறிவிட்டது. பலரும் தங்களுக்கு விருப்பமான பிரபலங்களின் பொம்மைகளை செய்து தருமாறு என்னிடம் ஆர்டர் கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்!’’

மனைவிக்கு நன்றி சொல்லுங்கள் நோயல்!

- ந. ஆஷிகா -

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close