Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’தெகிடி’ அசோக் செல்வன் நடிக்கும் அடுத்த த்ரில்லர் ‘வரைபடம்’!

சென்ற வருடம் வெளியான படங்களில் சிறந்த படங்கள் என லிஸ்ட் எடுத்தால் கண்டிப்பாக அதில் ‘தெகிடி’ படமும் இடம்பெறும். விமர்சன ரீதியிலும், கமர்ஷியல் அளவிலும் அனைவரிடமும் பாராட்டுகளை பெற்ற படம் . இப்பொது படத்தின் ஹீரோ அசோக் செல்வன் மீண்டும் த்ரில்லர் கான்செப்டையே கையில் எடுத்துள்ளார். 

புதுமுக இயக்குநர் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வரைபடம்’.இப்படத்தின் 15 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. இயக்குநர் அஷ்ரஃப் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். ‘தெகிடி’ படத்திற்கு இசையமைத்த நிவாஸ் பிரசன்னா இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். அவருக்கு இது இரண்டாவது படம். 

‘தெகிடி’ படத்தின்  பாடல்களும் அனைவரிடமும் நன்மதிப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அசோக் செல்வனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடித்து வருகிறார். இவர் கன்னடத்தில் வெளியான ’சந்திரலேகா’ படத்தின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற ‘பிரேம கதா சித்திரம்’ படத்தின் ரீமேக் தான் ‘சந்திரலேகா’. இப்படமே தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தமிழில் ‘டார்லிங்’ படமாக வெளியாக உள்ளது. 

படப்பிடிப்புகள் சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் நடந்துவருகின்றன. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close