Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஜித்தின் அடுத்த படம்!

’வீரம்’ ஹிட்டானதை அடுத்து தற்போது அஜித் கௌதம் மேனனின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் பிசியாக இருக்கிறார். அந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் யாவும் விரைந்து நடந்து வருகின்றன. இப்படம் ஜனவரி 29ம் தேதி திரைக்கு வருகிறது. 

இறுதிகட்ட பணிகள் முடியாததாலும் , மேலும் ‘ஐ’ படத்திற்காக முன்பே திரையரங்குகள் ஒப்பந்தமானதாலும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் ரிலீஸ் தேதி பொங்கல் என்று அறிவிக்கப்பட்டு ஜனவரி 29க்கு மாற்றப்பாட்டுள்ளது.

தற்போது ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு அடுத்து அஜித் நடிக்கும் அடுத்த படம் என்ன? என்ற கேள்விக்கு பதிலாக மீண்டும் இயக்குனர் சிவா மற்றும் அஜித் இணைகின்றனர் என செய்தி வெளியாகியுள்ளது.

அஜித் , சிவா இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘வீரம்’ படத்தை கிராமத்துப் பின்னணியில் கொடுத்த சிவா தனது அடுத்தப் படத்தை நகர பின்னனியில் ஆக்‌ஷன் கதைக்களமாக அமைக்க இருக்கிறார்.

இயக்குனர் சிவா இயக்கிய ‘சிறுத்தை’, ‘வீரம்’ இரண்டிலுமே தமன்னாதான் ஹீரோயின் என்பதால் அஜித் ஜோடியாக தமன்னாதான் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அந்த படத்தில் சமந்தா நடிக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வரவில்லை. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close