Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஷால் - சுசீந்திரன் இணையும் அடுத்த படம்!

வருடத்திற்கு இரு படம் என்ற வேகத்தில் அறிவித்தபடி படத்தை வெளியிடும் ஆளாக ஃபார்ம் ஆகி விட்டார் விஷால். அதே பாணியில் இப்போது மீண்டும் ‘ஆம்பள’ படம் வெளியாவதற்குள்ளாகவே அடுத்த படத்திற்கான வேலைகளையும் இன்னொரு பக்கம் முடுக்கி விட்டுள்ளார்.’பாண்டியநாடு’ ஹிட்டிற்கு பிறகு மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்க இருக்கிறார்.

’ஆம்பள’ படம்  பொங்கலை முன்னிட்டு வரும் 15ம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவிருப்பதால் அதன் பணிகளில் மும்முரமாக சுழன்று கொண்டிருக்கிறார் விஷால். இன்னொரு புறம் இயக்குநர் சுசீந்திரனும் ஹரிஷ் கல்யாண், ஸ்ரீ, சம்ஸ்க்ருதி, ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடிக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகளும் சில நாட்களில் முடிந்துவிடும். இதன்பிறகு இருவரும் இணைந்து அடுத்த படத்தை துவங்க உள்ளனர்.

இதில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். காஜல் அகர்வால் தற்போது தனுஷுடன் ‘மாரி’ படத்தில் நடித்து வருகிறார். ஜனவரி 13ம் தேதி முதல் சுசீந்திரன் இயக்கும் படத்திற்காக விஷால் படத்திலும் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள்  ஹைதராபாத்தில் துவங்குகிறது.

இதன்பிறகு ஜனவரி 13ம் தேதி முதல் விஷால் படத்தில் கவனம் செலுத்த உள்ளார் சுசீந்திரன்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close