Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திக்கு செல்கிறது ’ர’ படம்!

வித்யாசமான கதைக்களம் , மேக்கிங் என விமர்சன ரீதியில் நன்மதிப்பை பெற்ற படம் ‘ர’. இப்போது இந்த படம், இந்தியில் ரிமேக் ஆக உள்ளது. 

ஆஷ்ரப், அதிதி செங்கப்பா நடித்து பிரபு யுவராஜ் இயக்கிய படம். ஆர்யன் இசையமைப்பில் ப்ளான் ஏ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியானது. படத்தின் கதையை இயக்குநர் பிரபுவும் ஹீரோ அஷ்ரப்பும் இணைந்தே எழுதியிருந்தனர்.

தற்போது இப்படத்தின் இந்தி உரிமையை ஒயில்ட் எலிபெண்ட்ஸ் (Wild elephants) என்ற நிறுவனம் பெற்றுள்ளது. இந்தியில் வேறுநடிகர்கள் நடிப்பில் அஷ்ரப்பும், பிரபுவும் இணைந்தே இயக்க உள்ளனர். 

இந்தியில் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்புகள் துவங்க உள்ளன. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close