Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேப்டன் என்றால் சரியான ஆள் விஷால் தான் - சொல்கிறார் புது கேப்டன் ஜீவா!

சினிமா நட்சத்திரங்களின் கிரிக்கெட் லீக்கில் சென்னை ரைனோஸ் அணியின் புதிய கேப்டனாக தேர்வாகியுள்ளார் ஜீவா. இதற்கு முன்பு அணியின் கேப்டனாக இருந்த விஷால் பொங்கல் ரிலீஸ், வருடத்திற்கு இரு படங்கள் என பிசியான காரணத்தால் சிசிஎல் கேப்டன்ஷிப்பிலிருந்து விலகினார். அதை தொடர்ந்து புதிய கேப்டனாக ஜீவா அறிவிக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் ஜீவா பேசிய போது, “கேப்டன்ஷிப்புக்கு விஷால் தான் சரியான ஆள். அவரது வேலைப்பளு காரணமாக கேப்டன்ஷிப்பில் இருந்து ஒதுங்கியிருக்கிறாரே தவிர, போட்டிகளில் அவர் கலந்துகொள்ளத்தான் இருக்கிறார். சினிமாவை விட சி.சி.எல் போட்டியில் விளையாடுவது என்பது டென்ஷனான காரியம். நாங்கள் காமெடி பாய்ஸ் அல்ல ,சீரியசாக விளையாடுவோம்.

வீட்டில் கூட சின்ன பசங்க போல்  சேர்ந்து கொண்டு விளையாடுகிறோம் என்றனர். கண்டிப்பாக இல்லை. எல்லாரும் கடினமாக உழைத்து வருகிறோம். நீங்களே பாருங்கள் கருத்து விட்டோம். அந்த அளவிற்கு நாங்கள் ஃபிட்டாக இருக்கிறோம்.சென்ற வருடம் ஆடியவர்களில் சிலர் இந்த வருடம் ஆடவில்லை, எங்களுக்கும் அதில் உடன்பாடில்லை எனினும் கமிட்டியின் முடிவுகளே இறுதியானது. என கூறியுள்ளார் ஜீவா. 

ஜீவாவை கேப்டனாக கொண்ட சென்னை ரைனோஸ் அணியில் விஷ்ணு துணை கேப்டனாகவும் , விஷால், பரத், ரமணா, விக்ராந்த், போஸ் வெங்கட், பாலாஜி, ஷாம், சாந்தனு, சோனு பாலாஜி, அஷோக் செல்வன் உட்பட பலர் ஆட இருக்கின்றனர். 

ஜனவரி 10ம் தேதி அதாவது நாளை மும்பையில் துவங்க உள்ள சிசிஎல் போட்டியில் 11ம் தேதி ஹைதராபாத்தில் நடக்கும் போட்டியில் கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணியையும், 18ம் தேதி பெங்களூருவில் நடக்கும் போட்டியில் வீர் மராத்தி அணியையும், 25ம் தேதி அகமதாபாத்தில் நடக்கும் போட்டியில் மும்பை ஹீரோஸ் அணியையும் எதிர்கொள்கின்றனர் சென்னை ரைனோஸ் அணி. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close