Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'லிங்கா' நஷ்டம்: ரஜினிக்கு ஆதரவாக நடிகர் சங்கம் அறிக்கை!

'லிங்கா' படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை, நடிகரிடம் கேட்பதை விட படத்தின் தயாரிப்பாளரிடம்தான் கேட்க வேண்டும் என்று திரைப்பட விநியோகஸ்தர்களுக்கு நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக நடிகர் சங்க தலைவர் ஆர்.சரத்குமார் மற்றும் செயலாளர் ராதாரவி ஆகியோர் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "லிங்கா படம் வசூல் குறைவாக உள்ளதாக தெரிவித்து, அதனால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு செய்திட ரஜினிகாந்த் தலையிட வேண்டும் என்று திரைப்பட விநியோகஸ்தர்கள் கோரிக்கை எழுப்பி வருகிறார்கள். ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதும், வசூல் குறைவு ஏற்படுவதும் ரசிகர்கள் கையில் தான் இருக்கிறது.

எனினும் அதற்கு முன்பாக அந்த திரைப்படம் யூகத்தின் அடிப்படையில் விலைபேசி முடிவு செய்த பிறகு திரையிடப்படுகிறது. எந்த ஒரு தொழிலும் லாப நஷ்டம் இரண்டும் உண்டு. அதையாரும் வெளியில் சொல்வதில்லை.

அதுபோன்று தான் லிங்கா திரைப்படம் மூலம் அதிக வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்த்து செய்த வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னால், அந்த நஷ்டத்தை அந்த படத்தில் நடிகரிடம் கேட்பதைவிட தயாரிப்பாளரை அணுகி தங்கள் கோரிக்கையை சொல்லலாம்.



ஏனென்றால் தங்கள் படத்தில் இவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து தங்கள் விநியோகத்தில் சலுகை செய்து இழப்பை ஈடுகட்ட வேண்டும் என்று வணிகரீதியாக அணுகலாம் அதில் தவறில்லை. அதேசமயம் அந்த படத்தின் நடிகரிடம் கேட்பதில் நியாயம் இருக்க முடியாது. ஒவ்வொரு நடிகர் படமும் ஏற்ற இறக்கத்துடன் வசூல் செய்கிறது. அதை யாரும் முன்கூட்டி சரியாக கணக்கிட முடியாது.

லாபம் கிடைக்கும் போது சந்தோஷப்பட்டுவிட்டு, வருவாய் இழப்பு ஏற்படுகிற போது மட்டும் அந்த படத்தின் நடிகர் தலையிட்டு சரி செய்ய வேண்டும் என்றால் எந்த ஒரு நடிகரும் அதை பின்பற்ற முடியாது.

எனவே திரைப்பட விநியோகஸ்தர்கள் ’லிங்கா’ திரைப்பட தயாரிப்பாளரை அணுகி தங்கள் குறைகளை முறையிட வேண்டுமே தவிர, தன் உழைப்பை தந்து படத்தை முடித்து கொடுத்த நடிகரை (ரஜினிகாந்த்) அணுகி நஷ்டத்தை பற்றி விவாதிப்பது தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்" என்று கூறியுள்ளனர்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close