Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’ஐ’ வெளி வர தடை ஏதும் இல்லை - படக்குழு தகவல்!

பொங்கலுக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட ஷங்கரின் ‘ஐ’ படம் இப்போது திட்டபடி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிக்சர் மீடியா ஹவுஸ், ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனத்திடம் கடனாக பெற்ற தொகையை திருப்பி தரும் வரை படத்தை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து படத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

தற்போது படத்தின் ரிலீஸ் குறித்த பிரச்னை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட்டு விட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது. 'ஐ' படம் சம்மந்தமாக பிக்சர் மீடியா ஹவுஸ் அனுப்பியுள்ள பத்திரிகை குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பத்திரிகைக் குறிப்பு வாயிலாக ஆஸ்கார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் ரவிசந்திரன் தயாரிக்கும் 'ஐ' படத்துக்கு எங்களது முழு ஒத்துழைப்பை தருகிறோம்.ஜனவரி14ஆம் தேதி பொங்கலன்று  வெளிவரும் 'ஐ' படம் விஷயமாக எங்களுக்குள் இருந்த தொழில் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் சுமூகமாக பேசி தீர்க்க பட்டு விட்டது.

திரைபடத்துறையின் நலனை முன்னிட்டு இந்த முடிவு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஆகவே 'ஐ' படம் குறிப்பிட்ட தேதியில் வெளி வர தடை ஏதும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிய படுத்துகிறோம். இந்த படத்தில் சம்மந்தப்பட்ட அத்தனை பேருக்கும் இந்த குறிப்பு மூலம்  வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம். என தெரிவித்துள்ளனர். 

இதேபோல், தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன், பிக்சர் ஹவுஸ் மீடியா நிறுவனத்தைச் சார்ந்த அரசுவுக்கு தர வேண்டிய 17 கோடி கடனை கொடுத்துவிட்டதால், அரசு தனது வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டார்.இதைத் தொடர்ந்து, 'ஐ' திரைப்படம் மீதான இடைக்காலத் தடையை நீக்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close