Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

படப்பிடிப்பு முடியும் முன்பே பெருந்தொகைக்கு விலைபோன ‘புலி’!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் படம் ‘புலி’. ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, ஸ்ரிதேவி, சுதீப் நடிக்கும் இப்படத்திற்கு இசை தேவிஸ்ரீபிரசாத். ஏற்கனவே விஜய் மற்றும் தேவிஸ்ரீபிரசாத் கூட்டணியில் ‘வில்லு’, மற்றும் ‘ சச்சின்’ படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

தேவிஸ்ரீபிரசாத் இசையில் விஜய்யின் மூன்றாவது படமான இப்படத்தில் மொத்தம் 6 பாடல்களாம். மூன்று பாடல்களுக்கு இசையமைத்து கொடுத்துவிட்டாராம். அதில் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படத்தில் விஜய் பாடுகிறாரா என்பதை இப்பவே சொல்ல முடியாது என சஸ்பென்ஸ் வைத்துள்ளார் தேவிஸ்ரீபிரசாத். வரிகள் வைரமுத்து. 

இப்படத்தின் சென்னை, செங்கல்பட்டு, வட , தென் ஆற்காடு ஏரியாக்களின் விநியோக உரிமையை பெரிய தொகை கொடுத்து ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் உரிமையாளர் முரளி கைப்பற்றியிருக்கிறாராம். ’கத்தி’ 100 கோடி க்ளப்பில் இணைந்த நிலையில் தற்போது மேலும் விஜய் படங்களுக்கு சற்றே மவுசு ஏறியுள்ளது.  

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close