Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சைன்ஸ் ஃபிக்சன் கதையாக உருவாகும் ’இன்று நேற்று நாளை’ !

ஜீவா’ படத்திற்குப் பிறகு விஷ்ணு நடித்து வரும் படம் ‘இன்று நேற்று நாளை’. இதில் விஷ்ணுவிற்கு ஜோடியாக ‘அமரகாவியம்’ மியா ஜார்ஜ் நடித்து வருகிறார். இப்படத்தை ரவி இயக்கி வருகிறார். ’ஆம்பள’ படத்தையடுத்து ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். 

முழுக்க முழுக்க காமெடியாக உருவாகி வரும் இப்படத்தில் கருணாகரன், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது முடிந்து விட்டன. தற்போது படத்திற்கான பின்னணி வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக வித்யாசமான கதையிலும் மேலும் காமெடியாகவும் உருவாகி வரும் இப்படத்தை சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றன.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close