Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் இணைகிறது ‘மீகாமன்' கூட்டணி!

கடத்தல் மாஃபியா , அதை கண்டுபிடிக்கும் அண்டர் கவர் போலீஸ் ஆபரேஷன், என படு ட்விஸ்ட்டாக வெளியாகி சைலண்டாக ஹிட்டடித்த படம் ஆர்யாவின் ‘மீகாமன்’ . ஆர்யா , ஹன்சிகா நடிப்பில் உருவாகிய இப்படத்திற்கு கிடைத்த  வரவேற்பினால் மீண்டும் இயக்குநர் மகிழ் திருமேனியும் , ஆர்யாவும் இன்னொரு படத்தில் இணைய உள்ளனர். 

’மீகாமன்’ படத்தின் படப்பிடிப்பின் போதே இன்னொரு ஆக்‌ஷன் கதையை ஆர்யாவிடம் கூறியுள்ளார் மகிழ்திருமேனி, அதுபிடித்துப் போக ஆர்யாவும் ஓகே சொல்லிவிட்டாராம். தற்சமயம் ‘புறம்போக்கு’, ‘யட்சன்’, மற்றும் ‘ வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க’ படங்களில் பிசியாக இருக்கிறார் ஆர்யா. 

இந்த படங்களின் முடிவுக்கு பிறகு மகிழ்திருமேனி, ஆர்யா கூட்டணி மீண்டும் இணையும் என தெரிகிறது. தன்னுடைய ‘தடையற தாக்க’ மற்றும் ‘மீகாமன்’ என இரு படங்களிலும் எதிர்பார்க்க முடியாத ஆக்‌ஷன் காட்சிகளை வைத்த மகிழ் இந்த படத்திலும் அதே பாணியிலான ஆக்‌ஷனை அமைப்பார் என நம்பப்படுகிறது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close