Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை ரைனோஸ் அணி அபார வெற்றி !

கடந்த ஜனவரி 11ம் தேதி மும்பையில் துவங்கிய CCL (நட்சத்திர கிரிக்கெட் லீக்) போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாக சென்னை ரைனோஸ் கேப்டன் ஜீவா தலைமையில் கேரளா ஸ்ட்ரைக்கர்கஸ் அணியுடன் மோதினர்.

முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியானார். ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 149 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி, 7விக்கெட்டுகள் இழப்பிற்கு 89 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

இதனால் 59 ரன்கள் வித்யாசத்தில் சென்னை அணி கேரளா அணியை வென்றது. மேலும் 52 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்த சாந்தனு ஆட நாயகன் விருதை தட்டினார். இதனையடுத்து 18ம் தேதி வீர் மாராத்தி அணியுடன் சென்னை அணி அடுத்து களம் இறங்க உள்ளது குறிப்பிட்டத்தக்கது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்