Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என் தாடியைப் பார்த்து வாய்ப்பு வந்தது - .ஜி.வி.பிரகாஷ்!

பொங்கல்  ரேசில் திடீரென குதித்த படம் ‘டார்லிங்’. தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய ‘பிரேம கதா சித்ரம்’ படத்தின் ரீமேக் தான் ’டார்லிங்’. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அப்போது ஜி.வி.பிரகாஷ் பேசும்போது என் தாடியை பார்த்துதான் இப்பட வாய்ப்பு வந்தது என கூறியுள்ளார்.

அவர் பேசுகையில், "பென்சில்' படம் 3 மாதங்களாக படப்பிடிப்பு இல்லாததால் சலித்து தாடி விட்டிருந்தேன். என் தாடியைப் பார்த்து இப்பட வாய்ப்பு வந்தது " என்ற ஜி.வி.பிரகாஷிடம் இனி இசையமைக்க மாட்டீர்களா என்ற கேள்வி வைக்கப்பட்டது. 

"இசையை என்றும் விடமாட்டேன் இப்போது கூட ஏ.எல்.விஜய், வெற்றிமாறன் போன்ற இயக்குநர்களின் 10 படங்கள் இசையமைக்கிறேன்.

'டார்லிங்' ட்ரெய்லரை பார்த்துவாழ்த்தி ஏ.ஆர்.ரகுமான் சார் ட்வீட் செய்ததில் இந்திய அளவில் ட்ரண்டிங்கில் முன்னணியில் இருந்தது." என்றார்.

நிகழ்ச்சியில் இயக்குநர் சாம் ஆண்டன். ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த் பாடலாசிரியர்கள் நா.முத்துக்குமார், அருண்ராஜா, நடிகர் கருணாஸ், நாயகி ஸ்ருஷ்டி நடன இயக்குநர் காதல் கந்தாஸ் ஆகியோரும் பேசினார்கள்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close