Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திட்டமிட்டபடி வெளியாகும் ‘ஆம்பள’ - தள்ளுபடியானது மனு!

சுந்தர் சி இயக்கத்தில் விஷால், ஹன்சிகா, சந்தானம் , சதீஷ் நடிப்பில் பொங்கல் சிறப்பாக நாளை வெளியாக உள்ளது ‘ஆம்பள’. படம் வெளியாக உள்ள நிலையில் திடீரென படத்திற்கு தடை கோரி வழக்கு என சிக்கல் எழுந்தது. ஸ்ரீசாய் சினி சர்க்யூட் என்ற பட நிறுவனத்தைச் சேர்ந்த கோபாலன் என்பவர் படத்தின் தலைப்புக்கு எதிராக சிவில் நீதிமன்றத்தை அணுகினார்.

மனுவில், ’ஆம்பள’ தலைப்பு தன்னுடையது. ஏற்கெனவே இந்த தலைப்பை பதிவு செய்து 40 சதவிகித படப்பிடிப்பு முடித்துவிட்டேன். எனவே விஷாலின் ’ஆம்பள’ வெளியானால் தனக்கு பெரிய நஷ்டம் ஏற்படும் எனவும் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வழ்க்கு தொடர்ந்தார். 

இந்த மனு நீதிபதி ஜெயமங்களம் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் வி.மனோகர், டி.ரமேஷ் ஆகியோர் ஆஜராகி வாதம் செய்தனர். விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பதிலளிக்க கால அவகாசம் கேட்டதால், இந்த வழக்கு செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

நேற்று இந்த வழக்கு சென்னை சிட்டி 15-வது சிவில் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு மனுதாரரின் வாதத்துக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி கோபாலனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் ’ஆம்பள’ படம் அறிவித்தபடி நாளை ரிலீஸாவது உறுதியாகிவிட்டது!

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close