Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனுஷ்காவுக்கு சிலை வைத்த நடிகர்!

மிழ் ரசிகர்களைத் தவிக்க விட்டு, புகுந்த வீட்டுக்குச் செல்ல இருக்கிறார் த்ரிஷா. கொஞ்சம் அவசரப்பட வில்லையென்றால், குஷ்பூவுக்குப் பிறகு ‘த்ரிஷா கோயில்’ உருவாக வாய்ப்பு இருந்திருக்கலாமோ என்னவோ! குஷ்பூவுக்குக் கோயில் என்றால், அனுஷ்காவுக்குச் சிலை உருவாகியிருக்கிறது. 

ஆனால், சிலை வடித்தது ரசிகக் கண்மணிகள் இல்லை. தெலுங்குப் பட யூனிட்டில் ஒரு காட்சிக்காக ரியலாகவே அனுஷ்காவுக்குச் சிலை வடித்துவிட்டார்கள்.  

தமிழில் மெகா ஹிட் அடித்த ‘சூது கவ்வும்’ படம், தெலுங்கில் ‘கட்டம் கேங்’ என்ற பெயரில் ரிலீஸாகிறது. 

இதில், விஜய் சேதுபதி கேரக்டரில் ‘இதுதான்டா போலீஸ்’ புகழ் ராஜசேகர் நடிக்கிறார். ‘சூது கவ்வும்’ படத்தில் பாபி சிம்ஹா, நயன்தாராவுக்குக் கோயில் கட்டிய இளைஞர் கேரக்டரில் நடித்திருப்பார் அல்லவா? 

‘தெலுங்கில் யாருக்குக் கோயில் கட்டலாம்?’ என்று ‘கட்டம் கேங்’ யூனிட் யோசித்தபோது, அனுஷ்காவுக்கு சிலை வைத்து கேரக்டரை மாற்றினால் என்ன என்று படத்தின் டைரக்டர் அச்சு ஐடியா கொடுத்ததன் விளைவாக, ரியலாகவே சிக்கென்று சிலை வடித்திருக்கிறார்கள் அனுஷ்காவுக்கு. 

அனுஷ்காவிடம் முறைப்படி அனுமதி பெற்று, இந்தச் சிலையை உருவாக்க முழுக்க முழுக்க உதவிய சிற்பி , படத்தின் ஹீரோ டாக்டர் ராஜசேகர். 

ஆனால், படம் வெளியாகும்வரை சிலைக்கு பப்ளிசிட்டி தடா விதித்திருக்கிறது ‘கட்டம் கேங்’ டீம்!

சிலைக்கே சிலையா! ஆமா பாஸ் ஆறடியில் சிலை வைக்க செலவு எகிறுமே! 

- தமிழ் -

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
[X] Close