Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நான் விஜய் சாருக்கு தீவிர ரசிகை ஆகி விட்டேன் - கப்பல் நாயகி சோனம் பஜ்வா!

‘கப்பல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சோனம் பாஜ்வா. தமிழ் சினிமாவில் தனது அறிமுகம் மற்றும் அதற்கு கிடைத்த ஆதரவிலும் மகிழ்சியடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 

“நான் பஞ்சாபை சேர்ந்தவள்தான் என்றாலும்  என்னுடைய நண்பர்களில் பெரும்பாலோர் தமிழர்கள்தான். இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குநரான ஷங்கர் ஸாருடைய தயாரிப்பில் என்னுடைய  முதல் படம் வந்திருப்பது எனக்கு மிக, மிக பெருமையுடைய விஷயம்.

‘கப்பல்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ்த் திரையுலகின் தூண்களான விஜய்  சார், விக்ரம் சார், ரகுமான் சார், ஷங்கர் சார் அனைவரையும் ஒரே மேடையில் சந்தித்ததில் எனக்கு  மகிழ்ச்சி. அவர்களது கனிவான வார்த்தைகளும், ஊக்கமும் என்னை உற்சாகமூட்டியது.

இதற்கு பிறகு நான் விஜய் சாருக்கு தீவிர ரசிகை ஆகி விட்டேன். எளிமையாக அதே நேரம் எல்லோரையும் கவரும் காந்தமுமாக இருந்தார். அவருக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை. அவருடன் ஜோடியாக ஒரு படம்  நடிக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறேன். அது இந்த வருடமே கை கூடும் என்பதில் நம்பிக்கையும் இருக்கிறது.

‘கப்பல்’ படத்துக்கு பிறகு எனக்கு நிறைய  வாய்ப்புகள் வந்திருக்கின்றன. அது சம்பந்தமாக விரைவில் முறையான அறிவிப்பு வரும். நான் சமீபமாக மேலும் நிறைய தமிழ் படங்களை பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன். எனவும் கூறியுள்ளார் சோனம் பஜ்வா. 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close