Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் வெற்றியை தக்க வைத்தது சென்னை அணி!

கடந்த 10ம் தேதி துவங்கியுள்ள நட்சத்திர கிரிக்கெட் லீக் போட்டிகளில் 11ம் தேதி சென்னை ரைனோஸ் அணி , கேரளா புல்டோஸர்ஸ் அணியுடன் மொதியது. அதில் வெற்றி பெற்ற சென்னை அணி. தனது வெற்றியை நேற்றைய ஆட்டத்தில் மீண்டும் தக்கவைத்துள்ளது. 

நேற்று சின்னச்சாமி ஸ்டேடியத்தில் சென்னை அணியும் , வீர் மராத்தி அணியும் மோதினர். டாஸின் ஜெயித்த சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்து விளையாட துவங்கினர். 40 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த வீர் மராத்தி அணி. பின் நிதானமாக விளையாடி 20 ஓவர்களுக்கு 154 ரன்களை எடுத்து, சென்னை அணிக்கு 155 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயம் செய்தனர்.

 தொடர்ந்து விளையாடிய சென்னை ரைனோஸ் அணி 12.3 ஓவர்களுக்கு ஒரு விக்கெட் இழப்பில் இலக்கை அடைந்தனர். மேலும் ரமணா மற்றும் விஷ்ணு இருவரும் இணைந்து 135 ரன்களை கொடுத்தனர். ரமணா 31 பந்துகளில் 54 ரன்களும், விஷ்ணு 43 பந்துகளில் 82 ரன்களையும் எடுத்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் மூலம் இரண்டாவது வெற்றியையும் தக்க வைத்துள்ளனர் சென்னை ரைனோஸ் அணி.  

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close