Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்!

இப்படி ஒரு படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர். ஏ.எல்.அபநிந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள இப்படத்தில் இக்நைட் பிலிம்ஸ் மற்றும் இன்னொஸ்டோர்ம் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ படத்தை எழுதி இயக்குபவர் ஏ .எல்.அபநிந்திரன். விளம்பரத் துறையிலும், வர்த்தகத் துறையிலும் ‘அபி’ என்ற பெயரில் ஏற்கெனவே பிரபலமானவர் இவர். இயக்குனர்-ஒளிபதிவாளர் ராஜீவ் மேனனிடம் பல படங்களுக்கு இணை இயக்குனராக பணியாற்றியவர் 

இந்தப் படம் பற்றி பேசிய இயக்குநர் அபநிந்திரன்,குறைந்த முதலீட்டில் தயாரிக்க படும் படங்களுக்கு வித்தியாசமான தலைப்புகள் மிக முக்கியமானது ஆகும். 'வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' என்ற இந்த தலைப்பு  பிரபலமானது என்பதற்காக மட்டும் அல்ல , கதைக்கும் மிக  பொருத்தமானது என்பதால் தான் ஏற்றுக் கொண்டோம்.

நமது  சமூகத்தில் நிலவி வரும் நம்பிக்கைகளும் மூடநம்பிக்கைகளும் தான் நமது வாழ்வின் நீரோட்டத்தை நிர்ணயிக்கிறது. அந்த உண்மையை சிரிப்பதுடன் சிந்திக்க வைக்கும் கதை அமைப்புடன் சித்தரிக்கும்  படம் தான் 'வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' . சாரங்கராஜன் ஒளிபதிவில் , 'காதல்' படத்தின் பாடல்கள் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்த ஜோஷ்வா ஸ்ரீதர் இசை அமைக்க, ஆண்டனி படத்தொகுப்பில், ஏ .செந்தில் குமாரின் கலை வண்ணத்தில்,கபிலன் வைரமுத்து மற்றும் புகழேந்தி பாடல்கள் இயற்ற புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தை தயாரிப்பவர் தேவன்ஷு ஆர்யா. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close