Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புலி படக்குழுவினருக்கு விஜய் கொடுத்த பொங்கல் பரிசு!

விஜய் முதல்முறையாக அரசர் கால கதையில் நடித்து வரும் படம் ‘புலி’. ரெட்டை வேடத்தில் விஜய் நடித்து வரும் இதில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் நடிக்கின்றனர். ஸ்ரீதேவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார் பி.டி.செல்வகுமார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தலக்கோணம் பகுதியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முன்பாக சென்னையில் ஸ்டூடியோக்களில் பிரம்மாண்ட அரண்மனை செட்டிங்கில் முதற்கட்ட பணிகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் விஜய் பொங்கல் விழாவையும் அங்கேயே படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார். மேலும் படத்தில் பணியாற்றி வரும் கிட்டத்தட்ட 260 தொழிலாளர்களுக்கும் தங்க நாணயம் பரிசாக வழங்கி அவர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close