Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆர்யா சொன்னது பொய்! இனி நண்பர்களை கூப்பிட மாட்டேன்! - விஷால்!

பொங்கல் ரிலீசாக வெளியான ‘ஆம்பள’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய விஷால் இனிமேல் என் படங்களுக்கு இசை வெளியீட்டு விழாவே கிடையாது. அப்படி வைத்தாலும் நண்பர்களை நான் அழைக்கப் போவதில்லை என தடாலடியாக கூறினார். 

தொடர்ந்து அவர் பேசிய போது, இதற்கு முன் விஷ்ணு லட்சுமி மேனனுக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக பேசிவிட்டு போனார். அதை சரிசெய்யவே படாத பாடு பட்டேன். இப்போது அடுத்ததாக ஆர்யா ‘ எவனா இருந்தாலும் வெட்டுவேன்’ என கூறியதாக சொல்லிவிட்டார். சத்தியமாக நான் அப்படி சொல்லவே இல்லை.

 

எனக்கு பொங்கலுக்கு என்னென்ன படங்கள் வரும் என்பது கூடத் தெரியாது. நானும் சுந்தர்.சி இணைந்து படம் பண்ணினால் கண்டிப்பாக பொங்கல் வெளியீடாக வரவேண்டும் என்ற ஆசை மட்டுமே தவிர வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்று கூறினார்.

இதனால் இப்போது கோலிவுட் தரப்பில் சலசலப்பு உண்டாகி உள்ளது. இந்த வார்த்தையை ஏன் இசை வெளியீட்டு விழாவிலேயே விஷால் சொல்லவில்லை. ஒரு தயாரிப்பாளராக, முன்னனி நடிகராக இருக்கும் விஷால் எப்படி தனது படங்களுடன் வேறு எந்தெந்த படங்கள் வெளியாகிறது என்று கூட தெரியாமல் இருப்பார் என கேள்விகளும் எழத் துவங்கியுள்ளன.  

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close