Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என் படம் தரமான திருட்டு விசிடி வரவில்லை - விஷால்!

’ஆம்பள’ வெற்றிகொண்டாட்டத்தில் பேசிய விஷால் தனது படம் தராமன திருட்டு விசிடி வரவில்லை என கூறியுள்ளார். அவர் பேசுகையில் முன்பெல்லாம் புரஜெக்டர் ரூமிலிருந்து படத்தை பதிவு செய்வார்கள்.

இப்போது அவனால் செய்ய முடியவில்லை, நானும் எனது ‘ஆம்பள’ படத்தின் திருட்டு விசிடியை பார்த்தேன், ‘ஐ’ படத்திற்கும் வந்துள்ளது. ஆனால் ‘ஆம்பள’ படத்தின் திருட்டு விசிடியை சீட்டில் அமர்ந்தே எடுத்திருக்கிறான். பாவம் ரொம்ப கஷ்ட பட்டிருக்கிறார். அது நல்ல விஷயம் தான் ஓரளவிற்கு பயம் வந்திருக்கிறது.

படம் வேறு தியேட்டர், படத்தின் வசனனக்கள் வேறுதியேட்டர் என எடுத்து தனியாக இணைத்து அவர்கள் ஒரு போஸ்ட் புரடக்‌ஷன் யூனிட்டாக செயல்பட்டதாக கேள்விபட்டேன். அதில் எவ்வளவு கலெக்‌ஷன் வந்திருக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை எனக் கூறி சிரித்த விஷால், எந்த ஒரு படமும் கேமரா பிரிண்ட் மாத்திரமே வந்து ஒரிஜினல் காப்பி வராதவரை அதுவே மிகப்பெரும் வெற்றி என தெரிவித்துள்ளார்.

 

இன்னும் ஆரேழு மாதங்களில் அதை முற்றிலுமாக ஒழிக்க செயல்படுவோம் என கூறியுள்ளார் விஷால். முதன்முதலில் ‘மதகஜ ராஜா’ படம் எடுக்க ஆரம்பித்தபோது 2012 பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவேண்டும் என்ற ரீதியில் தான் படத்தை துவங்கினோம், அனைவருக்கும் ஏற்ற, தியேட்டர் உரிமையாளர்களுக்கும் சந்தோஷத்தை தரக்கூடிய விதத்தில் உருவாக்கிய படம் ‘மதகஜ ராஜா’ படம்தான்.

ஒரு படம் வெளியாகவில்லை என்ற ஆதங்கம் தயாரிப்பாளரை விட ஒரு நடிகனுக்குத்தான் இருக்கும். மீண்டும் 80 நாட்கள் வேலை செய்து இழந்த இடத்தை பிடிக்க கடினமாக பயணிக்க வேண்டும் என கூறி ‘ஆம்பள’ படத்தீற்கு கிடைத்த ஆதரவிற்கு தனது நன்றிகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து கொண்டார்.   

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close