Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாக்கமுக்கா ஸ்டைலில் விஜய் ஆண்டனியின் ’பிச்சைக்காரன்’ பட பாடல்!

விஜய் ஆண்டனி, ஆனந்த் இயக்கத்தில் ’இந்தியா-பாகிஸ்தான்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.இப்படம் முடிந்து விட்டது.இப்படத்தை அடுத்து ’திருடன்’ ,’சைத்தான்’ படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த இரண்டு படங்களையும் தள்ளி வைத்துவிட்டு இயக்குனர் சசி இயக்கத்தில் நடிக்க உள்ள ‘பிச்சைக்காரன்’ படத்தின் படப்பிடிப்புகளை துவங்கிவிட்டார்.

சசி இப்படத்துக்கு டைட்டில் ’பிச்சைக்காரன்’ என்று டைட்டில் சொன்னாராம். விஜய் ஆண்டனி இந்த டைட்டில் வேண்டாம் என்று மறுத்துவிட்டதாக வேறு டைட்டில் வைக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

பின் தன் நண்பர்களிடம் இந்த டைட்டிலை பற்றி கருத்து கேட்டாராம் இது போல் டைட்டில் வைத்தால் படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட்டாகும் என்று சொன்னார்களாம். அதனால் தற்போது இப்படத்தின் டைட்டிலுக்கு ஓகே சொல்லிவிட்டாராம் விஜய் ஆண்டனி. 

இந்த படத்திற்கு அவரே இசையமைத்து வரும் நிலையில் மெகா ஹிட் பாடலான ‘நாக்க முக்கா’ பாணியில் ஒரு பாடலையும் சில மெலோடி பாடல்களையும் உருவாக்கி உள்ளாராம். தற்போது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் பொள்ளாச்சியில் துவங்கப்பட்டுள்ளது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close